பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிநந்தன் விரைவில் தான் விமானி அறைக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்தியாவுக்கு திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் உடலில் ரகசிய கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்று உறுதியானது.
இந்நிலையில் வெகு விரைவில் காக்பிட்-க்கு தான் (விமானத்தில் உள்ள விமானியின் அறை) திரும்ப வேண்டும் என்று அபிநந்தன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போர் விமானத்தை இயக்குவதற்கு அவர் மேலும் சில மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவரால் போர் விமானத்தை இயக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
