அன்னப்பறவைக்காக 20 ரயில்கள் நிறுத்தம்..! ஜெர்மனியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..

ஜெர்மனியில் அன்னப்பறவை ஒன்று இறந்ததற்காக அதன் ஜோடிப்பறவை துக்கம் அனுஷ்டிக்க, அதனால் 20 ரயில்களை நிறுத்தியது ஜெர்மன் ரயில்வே துறை. ஜெர்மனியின் பல்டாடல் பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அன்னப்பறவை ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது. அதைக் கண்ட அதன் ஜோடிப்பறவையான மற்றொரு அன்னப்பறவை, இறந்த தன் ஜோடிக்காக துக்கம் அனுஷ்டிப்பதுபோல், அந்த ரயில் பாதையில் அமர்ந்துகொண்டது. இதனால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட, சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டியதாயிற்று. பின்னர், தீயணைப்புத்துறையினர் பிரத்தியேக கருவிகள் மூலம் மின் கம்பியில் சிக்கி இறந்த அன்னப்பறவையை அகற்றியதோடு, அதற்காக காத்திருந்த அதன் ஜோடிப்பறவையையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டு ஒரு நதிப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால், 23 ரயில்கள் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக செல்ல நேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published.