அந்த இடத்தில கயிறு கட்டினார்கள்! வலியால் துடித்தேன்!! திரைத்துறையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது! குணசித்ர நடிகையின் ஓபன் டாக் !

என்ன தான் சினிமாவில் பல முழுது ட்ராவல் பண்ணும் ரியல் நடிகர் நடிககிகள் இருந்தாலும் அவர்களுக்கு கூட நடிக்கும் குணசித்ர நடிகர் நடிகைகள் பெரும் அளவில் பேசப்படுவதில்லை. அப்படி பட்ட ஒரு நடிகை தான் வினோதினி அவர்கள் . எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை வினோதினியை யாரும் மறக்க முடியாது. இவர் ராட்சசன், கோமாளி, நண்பேண்டா, அரண்மனை  போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.இவர் அளித்துள்ள பேட்டியில், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் உண்டு. குடும்பத்தில் என் வயதுள்ள குழந்தைகளின் தனித் தன்மைகளை கவனிப்பேன். பொதுவாகவே கதை கேட்பதும், கதாபாத்திரங்களை கவனிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதன் தாக்கம்தான் நடிப்புத்துறைக்குள் என்னைத் திருப்பியிருக்கும் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ‘நடிகர்கள் எப்போதும் ஏ.சி அறையில்தான் இருப்பார்கள்; ஆப்பிள் ஜூஸ்தான் குடிப்பார்கள்’ என்று பலர் விமர்சிப்பதுண்டு. உண்மையில், ஒரு திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தெருக்களில் எடுக்கப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் வெயிலில் வியர்த்துக் கொட்டும். காலையில் போட்ட மேக்கப் கலையாமல் பார்த்துக்கொள்வதே ஓர் உடல் இயக்கம்தான்.

‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் நான் பயணம் செய்யும் பேருந்து எதிரே வரும் பேருந்துடன் மோதுவதுபோல ஒரு காட்சி. பேருந்து கவிழ்ந்து விழுவது மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கினார்கள். பாதுகாப்புக்காக என் உடலில் கயிறெல்லாம் கட்டினார்கள். அப்படியும் முதுகுத்தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. ‘காத்தாடி’ என்ற படத்தில் நடிக்கும்போது சாலை விபத்தில் சிக்கி, உயிரிழப்பதுபோலக் காட்சியமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியிலும் பாதுகாப்புக்காக கயிறு கட்டியிருந்தார்கள். இவ்வர்க்க குணச்சித்திரத்ர நடிகை வினோதினி கூறினார் .

Leave a Reply

Your email address will not be published.