தமிழ் திரையுலகில் நடிகை விந்தியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார். ஒரு கவர்ச்சி நடிகை போல இவரின் மீது ஒரு கண்ணோட்டமும் இருந்தது. ஆனால் முக்கியமான படங்களில் சிறந்த கதாபாத்திரங்களும் நடித்து பெயர் எடுத்துள்ளார் .

தமிழில் சில படங்கள் பெரிதளவில் இல்லாததால் அரசியலில் இறங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் நேசித்தவர். அவரின் கட்சியில் மேடையில் இவர் பேசிய பேச்சு நட்சத்திர பேச்சாளராக மாற்றியது. அவரின் பேச்சை அனைவரும் ஆச்சிரியமாக பார்த்திருந்தனர் .
மேடையில் இவர் எதிர்கட்சியினரை தைரியமாக கேலி, கிண்டல் செய்து சாட்டையடி கொடுத்து போல தாக்கி பேசியது மொத்த கட்சியினரையும் திரும்பி பார்க்கவைத்தது. சினிமாவில் அமைதியான கதாபத்திரத்தை மட்டும் செய்து பின்பு மேடை பேச்சில் அதிரடியாக இருந்தது மக்களை ஆசிரியபடுதியது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் கட்சியிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவியில் அமர்த்த கட்சி முடிவு செய்துள்ளதாம்.தற்போது அது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது .