நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான பீகிள் படம் சிறப்பாக ஓடிகொன்றிருக்கிறது, இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். நடிகர் விஜய் முதன்முறையாக ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார். இந்த படம் வசூலில் மாஸ் காட்டுகிறது, தமிழ்நாட்டில் படம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாக விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். மேலும் பல ஊர்களில் வெளியாகி 200 கோடிகளை தாண்டி வசூல் மழை பொழிந்து வருகிறது இந்த படம்.
தற்போது விஜய் 64வது படத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது என செய்திகள் வெளியாகியது. அண்மையில் ஒரு பேட்டியில் இந்த படத்தின் இயக்கும்பர் லோகேஷிடம் , தளபதி 64 எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் அதிகம் இருக்கிறது, ஆனால் அதை வெளியே காட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கிய கைதி படம் நல்ல வரவேற்பயி பெற்றுள்ளது. நடிகர் கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நல்லா விறுவிறுப்பான பல காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ். நடிகர் கார்த்தி சினிமா வரலாற்றில் இது ஒரு நல்ல படமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.