சமீப காலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம். வனிதா பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தினமும் செய்தியில் அடிபட்டு வருகிறார். அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர்.
வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார். பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார், அதன் பிறகு தான் பிரச்சனையே.
எங்கு திரும்பினாலும் இவரின் குடும்ப பஞ்சாயத்து தான் பெரியளவில் பேசப்பட்டது. தற்போது கூட லட்சுமி ராமகிருஷ்ணனை யூடியூபில் வனிதா செம்ம ரெய்ட் விட்டார். பிறகு இன்று கஸ்தூரியையும் அவர் விட்டு வைக்கவில்லை. இதை தொடர்ந்து டுவிட்டரிலும் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை தொடங்கியது. ஊரே இவர்கள் சண்டையை சுற்றி பார்க்க, தற்போது வனிதா டுவிட்டரை டீ ஆக்டிவேட் செய்துள்ளார், இது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.