உலகெங்கும் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பொது முடக்கம் போடாபட்டது. தற்போது நாடு முழுவதும் தளர்வுகள் விடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இதுவரை திறக்காமல் இருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்குக்கு தமிழ்நாட்டில் திறக்கப்படுத்து என்று கூறுகின்றனர். இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம்.
சமீபகாலமாக சீரியல் பார்வைவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. புதிய கதைக்களத்துடன் பல்வேறு சீரியல்கள் புதிதாக ஒளிபரப்பட்டு வருகிறது. மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே வார இறுதியில் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சன் டி.வி தொலைக்காட்சியில் சனிக்கிழமை ரஜினியின் சந்திரமுகி படமும், ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பானது.
மேலும் தற்போது அதன் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது, சந்திரமுகி – (9532000) டிஆர்பி புள்ளிகளை பெற்று வேட்டைக்காரன் – (83870000) திரைப்படத்தை முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய் டி.வி யில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா நிகழ்ச்சி – (94620000) பெற்றுள்ளது, இது வேட்டைக்காரன் திரைப்படத்தை விட அதிகமாகும்.