அதிரடியாக உடல் எடையை குறைத்த ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா..! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலைஞராக பணியாற்றியுள்ளார். கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். வெள்ளித்திரையில் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர்.

அதன் பின்னர் தனது திறமையால் ரௌத்திரம், இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி 2, வேலைக்காரன் போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் திரைப்படத்தில் பாண்டியமா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தார். அதற்கு பிறகு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி டிக் டாக் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு திருமண கோலத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுப்பட்டு வருகின்றார். இது குறித்த காணொளிகளை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.