அண்ணாமலை சீரியல் நடிகை குட்டி பூஜாவை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன பன்றாங்கனு தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அண்ணாமலை சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை பூஜா.சீரியல்களின் படபிடிப்பில் பயங்கர சேட்டையும், குறும்புதனமும் செய்துகொண்டே இருப்பாராம். இதனால் இவருக்கு குட்டி பூஜா என்ற பட்டப்பெயரும் உள்ளது.

இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்.இதைத்தொடர்ந்து, பல சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் பூஜா. அந்த சமயத்திலேயே பெற்றோர் பூஜா திருமணத்திற்கு மாப்பிள்ளை

தேடி வைக்க உடனே சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு மது என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடா நாட்டில் செட்டிலானார் பூஜா.

தற்போது இரண்டு இளவரசிகள் இருக்கிறார்கள். மேலும்,முதல் குழந்தைக்கு 9 வயதாகிறது. இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது.

மேலும், கனடாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் குட்டி பூஜா தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவிலிருந்து தமிழ் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதாகவும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அ டிமை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.