சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ் ஆகியோர் நடிக்கும் படம் தான் அண்ணாத்த. ஆனால் கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 50% சதவீத படப்பிடிப்புகள் முடங்கி கிடைக்கிறது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தின் முழு கதையும் லீக் ஆகிவிட்டது என ஒரு கதை இணையத்தில் வளம் வந்துகொண்டு இருக்கிறது. ஆம் கதைப்படி பார்த்தால் ரஜினியின் முறை பெண்களாக நடிக்கும் குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும் புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.
நயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும் பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று இணையத்தில் பரவி வருகிறது. முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவி வருவது. இதனால் கீர்த்தி சுரேஷுக்கு நயன்தாரா அம்மாவாக நடிக்கிறாரா என ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.