அட.., ‘குணா’ படத்தில் நடித்த நடிகையா இது..? – இந்த வயதிலும் எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் தான் உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் அவர்கள். திரைப்படக் காட்சிகளுக்காக எந்த ரிஸ்கும் அவர் எடுப்பதால் தான் அவரை உலக நாயகன் என அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கமல்ஹாசன் இன்று தமிழ்த்திரையுலகில் நடிப்பு ஆளுமையாக இருக்கிறார்.

கமல் நடித்த பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. அந்தவகையில் கமலை வைத்து சந்தான பாரதி இயக்கிய குணா படமும் பெரிய லெவலில் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் இப்போதும் பலரது பேவரட் ஷாங் ஆக உள்ளது. இந்த படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர்தான் தான் நடிகை ரோஷினி அவர்கள். இவர் இந்தப்படத்தில் “அபிராமி” என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் வரும் குகை இன்றும் குணா குகை என்றே அழைக்கப்படுகிறது. அவர் இப்போது என்ன ஆனார் என்ற விபரமே தெரியவில்லை.

இருந்தும் அவர் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே இந்த வயதிலும் இவர் அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…