அட,.. இந்த சிவகர்த்திகேயன் பட நடிகைகள் இருவரும் சிறுவயதில் இருந்தே தோழிகளா..? அட இது தெரியாம போச்சே நமக்கு..! இதோ புகைப்படம்..

சினிமா திரையுலகை பொறுத்தவரை தற்போது பல புதுமுக நடிகைகள் சினிமாவில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். முன்பை விட இப்போது வேறு மொழிகளில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்த பின்னர் அவர்கள் மக்கள் இடையே பிரபலமாகத நிலையில் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளனர். இப்படி இருக்கையில் சினிமாவில் நுழைந்து சில காலங்களிலேயே முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.

திரையுலகில் நடிக்க ஆரம்பித்து சில வருடங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றார். மேலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியான நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இப்படி இருக்கையில் இவரது சிறுவயது தோழியான கல்யாணி ப்ரியதர்சனும் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். சொல்லபோனால் இருவரும் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் மற்றும் ரெமோ போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் கல்யாணி ஹீரோ படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

சிறுவயது தோழிகளான இருவரும் தற்போது வளர்ந்து திரைப்படங்களில் கதாநாயகிகளாக கலக்கி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கல்யாணி பிரியதர்சனுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேலும் இவருக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் அவரது நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேசும் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

அதன் பின்னர் இருவரும் தங்களது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வைராளாகி வருகிறது. இந்நிலையில் கல்யாணி தற்போது சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்திலும் மற்றும் நான்கு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் சிறு வயது புகைப்படம் இனையத்தில் வெளியாகி அவர்களது ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறது.