அட.. ‘அழகி’ படத்தில் நடித்த குழந்தையா இது..? இப்போ எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் தெரியுமா..?

சினிமாக்களில் 2000 களில் சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அதிகப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி. முதலில் விளம்பரங்களில் நடித்தார். தொடர்ந்து பார்த்திபன் நடித்த “அழகி” படத்தில் குழந்தை நட்சட்திரமாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். விஜயகாந்த் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தில் விஜயகாந்த்_சிம்ரன் தம்பதியினரின் குழந்தையாக நடித்திருந்தார் ஸ்ருதி. கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் கதா நாயகனாக நடித்த ‘கை வந்த கலை’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி.

ஆனால் அந்தப்படம் ஹிட் ஆகவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு ஸ்ருதி பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. ஸ்ருதி பற்றி இப்போதுதான் நீண்ட இடைவெளிக்குப் பின்பு தெரியவந்துள்ளது. அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டியில், ‘ஜெர்மனியின் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு நடனமும், பாட்டுப்பாடுவதும் பிடிக்கும். ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கிடையாது.

நான் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது இரண்டாம் வகுப்பு படித்தேன். நான் படித்த பள்ளியிலேயே எனது அம்மா டேன்ஸ் டீச்சராக இருந்தார். இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க வந்துவிட்டதால் டயலாக்கை நினைவில் வைத்துப் பேச ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏதாவது ஒரு துறையில் தான் ஜெயிக்க முடியும் என்னும் சுட்சமத்தை புரிந்துகொண்டு நடிப்பை விட்டு, விட்டு படிக்க ஆரம்பித்துவிட்டேன்.’’என அதில் கூறியுள்ளார்.