அட்டகத்தி படத்தில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகையின் அண்ணியா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

இயக்குனர் ப. ரஞ்சித் இயக்கி, ஹீரோவாக தினேஷ், ஹீரோயினாக நந்திதா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து வெற்றியடைந்த படம் அட்டகத்தி. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்கப்படுகிறார். மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் திவ்யா, நதியா என்று இரண்டு பெண்கள் நடித்திப்பார்கள்.

அந்த காட்சியில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை வெறு யாரும் இல்லை, இதே படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணி தான். ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதில் ஒரு சகோதரர், ஐஸ்வர்யா விஷயம் குடித்து சிறு வயதிலேயே இறந்து விட்டார். மற்றொரு சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து வருகிறார்.

வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மனைவி தான் அட்டகத்தி படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *