எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் ஒருவர் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுள் ஒருவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்புவின் வெற்றியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் மாநாடு. அரசியல் கதைகளுத்துடன் மிகவும் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜெ. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா என பலரும் நடித்து வருகிறார்கள்.
கொரோனா காரணமாக நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் சிம்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ருசிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் ” மாநாடு படத்திற்காக சிம்பு கடமையாக உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை தனது உடல் எடையை குறித்துள்ளார் ” என அதிரடி தகவலை கூறியுள்ளார்.