அடுத்தடுத்து சோகம் நடிகர் அர்ஜுன் குடும்பத்தில், வருத்தத்தில் ரசிகர்கள்…

பிரபல கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், பன்மொழி திரைப்பட நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனுமான சிரஞ்சீவி சர்ஜா 22 படங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் அதிரடி படங்களில் நடித்ததற்காக அவரது ரசிகர்களும் “ஆக்சன் கிங்” என்று குறிப்பிடுகின்றனர். சிரஞ்சீவி சர்ஜா ‘வாயுபுத்ரா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகை மேகனா ராஜை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மேகனா தமிழில் காதல் சொல்ல வந்தேன் மற்றும் நந்தா நந்திதா என சில படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சர்ஜா அவர்கள் கடந்த ஜூன் 7 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார்.

நடிகர் துருவா சர்ஜா கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர். இவர் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் துருவா சர்ஜா மற்றும் அவரின் மனைவி ப்ரேரானா இருவரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இவருடைய உறவினர் சிரஞ்சீவி சர்ஜா இறந்தார். இவர்கள் இருவருமே அர்ஜுனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.