அடடே நடிகை அசின் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? இரண்டுவயது குழந்தையின் அம்மாவா இவர்..? ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை அசின். சூர்யாவோடு, அசின் நடித்த கஜினி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. கடந்த 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் வந்த அசின், 

கடந்த 2003ல் வெளியான ஜெயம்ரவியின் ‘குமரன் சன் ஆப் மகாலெட்சுமி’ மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகம் ஆனார். அஜித்துடன் ஆழ்வார், விஜயுடன் காவலன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஹீரோயினாக வலம்வந்தவர்.

கடந்த 2016ல் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டு சினிமா இண்டஸ்ட்ரிக்கு பிரேக் ் விட்டார் நடிகை அசின். இப்போது நடிகை அசினுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்துக்கு பின்னர் லைம்லைட்டுக்கு அப்பால் போய்விட்டார் அசின்.

இந்நிலையில் சமீபத்தில் லாக்டவுணுக்கு முன்னால் அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் சார்பில் நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அசின். அந்தப்படங்கல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.