அடக்கடவுளே..! – திருமணம் ஆகி 4 வருஷம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படி ஒரு இறப்பா..? – திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்திய நடிகரும், டாக்டருமான சேதுராமனின் மறைவு..!

நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அவைகளில் ஏதாவது ஒரு விஷயம் தான் நம்மை மிகவும் பலமாக தாக்குகிறது, அதாவது அந்த விஷயம் நம் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆம், இதுவும் அது போன்ற ஒரு விஷயம் தான். நம்மை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு சம்பவம் தான் இது. கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.

மேலும், மருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்தனம் போவார் ஸ்டார் உடன் இவர் நடித்ததை நாம் மறக்க மாட்டோம், அப்படிப்பட்ட படம் அது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், நடிகர் சேதுராமன் சென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். மேலும், நடிகர் சேதுராமனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரின் இறப்பை நம்பமுடியாத ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவரும் திருமணமாகி 4 வருடத்திலும், 35 வயதுக்குள் இப்படி இறப்பா? என கதறிய படி இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நேற்றுவரை நம்முடன் இருந்த நபர் தற்போது இல்லை என்று வருத்தம் அனைவரிடமும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.