அஞ்சலியுடன் ஒரே பெட்ரூமில் தங்கும் விவகாரம்..! நடிகர் ஜெய் ஓபன் டாக்! இது தான் முடிவா?

நடிகர் நடிகைகள் ஒன்றாக படங்களில் நடித்து, பிறகு திருமணம் வரை செல்லும் வழக்கம் அன்று முதல் இன்று வரை நடக்கிறது. அதில் பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் அடங்குவர். அந்த வரிசையில் தான் இவர்கள் இருவரும்..நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் இணைந்து எங்கேயும் எப்போதும் , பலூன் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் படப்பிடிப்புத் தளங்களில் கூட ஒன்றாக இணைந்து ஒரே பெட்ரூமில் தங்குவதாகவும் பல தகவல்கள் சமீபத்தில் பரவி வந்தன.

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது எனவும் கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகர் ஜெய் வெளியிட்டுள்ள புதிய தகவல் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜெய் தனக்கும் நடிகை அஞ்சலிக்கும் இடையில் காதல் இல்லை எனவும் எதிர்காலத்தில் கூட அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

மேலும் இது போன்ற பல நடிகைகளின் நடிகர்களின் கூட்டு நமக்கு இது வரை எதிர்பார்ப்பாகவே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.