அஜித் ஷாலினியின் காதல் சீக்ரட்டை உடைத்த பிரபலம்! வெட்கத்தில் சிவந்த ஷாலினியின் முகம்…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். இவரின் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் முழுவதும் திருவிழா கோலமாகும். இவரின் விசுவாசம் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தல அஜித். இவர் நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்விருவரும் இணைந்து அமர்களம் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

இந்நிலையில் தற்போது அஜித் – ஷாலினியின் காதல் குறித்த சீக்ரட்டான விஷயங்கள் தெரிய வந்துள்ளன. மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனின் ஃபேன் பேஜில், அஜித்-ஷாலினி காதல் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஷாலினி குஞ்சக்கோ போபனுடன் நிறம் படத்தில் நடித்த போது, அஜித் ஷாலியுடன் பேச, போபனின் ஃபோனுக்குதான் கால் செய்வாராம்.

இப்படி இவர்கள் பேசி கொள்வதற்கு, ஷாலினிக்கு சோனு என்றும் அஜித்துக்கு ஏ.கே-47 என்று கோட் வொர்டுகள் வைத்து கொண்டு பேசி கொள்வார்களாம். இந்த விஷயத்தை போபன் ஒருநாள் இயக்குநரிடம் சொல்ல, அவரும் விளையாட்டாக ஷாலினியை கிண்டல் செய்ய, ஷாலினியின் முகம் சிவந்தே விட்டதாம்”. அஜித்-ஷாலினியின் காதல் சீக்ரட்ஸ் குறித்து வெளியான இந்த தகவல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *