அஜித் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வாய்த்த சரண்!

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உடல்நலக் குறைவால் காலமானார். எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது. அவரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அவருக்கு சொந்தமான இடத்தில் சகல மரியாதையுடனும், காவல் துறை மரியாதையுடனும் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திடீரென இறுதி நேரத்தில் விஜய் இறுதி மரியாதை செலுத்தினார். உடனே அஜித் வராதது ஏன் என பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். கொரோனா காரணம் வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. சரண், அஜித் எனக்கு நல்ல நண்பர், அவர் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன?. இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, இப்போது இதை பற்றி பேச வேண்டியதுமில்லை. உலகில் என் அப்பா இல்லை, எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் இல்லை அவ்வளவுதான் என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.