தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. அதே போல் நேர்கொண்ட பார்வையின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வெற்றி இயக்குனரான எச். வினோத்திடம் கைகோர்த்துள்ளார் அஜித்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஹுமா குரேஷி நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு பட இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். இதனை இன்று நடிகர் கார்த்திகேயா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து உறுதி செய்தார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற மிக சிறந்த படங்களை கொடுத்தவர் இயக்குனர் எச். வினோத்.
இவர் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்திற்காக தல அஜித்தின் ரசிகர்கள் அனைவருமே மாபெரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று எச். வினோத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டாடடி வருகின்றனர்.