தமிழில் அஜித் உடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார் அனிகா. அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த அனிகா ஹீரோயினாக மலையாள சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் தீயாய் பரவி வருகின்றது. அந்த படத்தின் கதை பள்ளி மற்றும் கல்லூரி காதல் கதை என கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக மக்களை கவர்ந்த அனிகா ஹீரோயினாக ரசிகர்களை ஈர்ப்பாரா என்ற பேச்சும் தற்போதே எழுந்துள்ளது.

ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருந்தார். இதற்கு முன்பு விஜய் சேதுபதியின் நானும் ரெளடிதான் படத்தில் அனிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிகாவுக்கு தற்போது 15 வயது ஆகிறது. அவர் தற்போது ஹீரோயினாக அறிமுகமாக சரியான தருணம் என பல்வேறு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறுவதைப் பார்க்க முடிகிறது.
இருப்பினும் அவர் ஹீரோயினாக நடிப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போட்டோஷுட் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வந்த அவருக்கு தற்போது இப்படி சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஹீரோயினாக அனிகா ரசிகர்களை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.