அஜித்தின் காதல் மன்னன் படத்தில் வரும் திலோத்தமாவா இது! அவரின் தற்போதைய நிலை இதுதானா?..

1998ஆம் ஆண்டு ரொமாண்டிக் படமாக வெளிவந்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம் தான் காதல் மன்னன் . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார்.  அந்த அளவிற்கு உயர்த்திய படங்களில் ஒன்று காதல் மன்னன்.  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மானு. முதல் படமே தல அஜித்துடன் நடித்திருந்தார். அப்படத்தின் அனுபவத்தையும் நடிகர் அஜித்தை பற்றியும் சமீபத்தில் இணையத்தில் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து பகிர்ந்துள்ளார்.

நடிகர் விவேக் என்னுடைய பரதநாட்டியம் பள்ளில் பார்த்து காதல் மன்னன் படத்தில் நடிக்க பேசியுள்ளார். இதையடுத்து காதல் மன்னன் படத்தில் கமிட்டாகி நடித்தேன். ”என் வாழ்வில் அருமையான அனுபவத்தையும், பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கபோகிறேன் என்ற முக்கியத்தையும் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் அஜித் மற்றும் படக்குழுவே இப்படத்தின் 22 ஆண்டுகளாக கொண்டாடப்படும் படமாக இருக்க காரணம்.

மேலும் தல அஜித் மிகவும் சிம்பிளானவர் மனிதர். அஜித்தின் அழகிய தோற்றமும், நல்ல பண்பும், மாய சக்தியும் கொண்டு இருப்பதால் தான் அனைவருக்கும் அவரை பிடித்து வருகிறது” என்று கூறியுள்ளார் நடிகை மானு. காதல் மன்னன் படத்திற்கு பிறகு திருமணம் செய்து படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளார் மானு. கடந்த 2014ல் என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது கணவர் புற்றுநோய் சம்பந்தமான மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!