அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக்..! இது உங்களுக்கு தெரியுமா..? வெளியான புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் நடிகர் கார்த்திக். “அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது கார்த்திக் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். நவரச நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கார்த்திக் 1988ம் ஆண்டு நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு கவுதம் கார்த்திக் மற்றும் கயன் கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இதன் பின்னர் மனைவி ராகினியின் சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு கார்த்திக் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் – ரதி தம்பதிக்கு திரன் என்ற மகன் உள்ளார். இவருடைய மகன் கவுதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.