“மனைவி என்பதை விட அவள் என்றுமே எனக்கு தோழி” இயக்குநர் அட்லீ பளிச்.

தமிழ் சினிமாவில் ராஜாராணி, தெறி, மெர்சல் என தொடர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர். தற்போது அவர் இயக்கிய பீகிள் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

இவரது மனைவி பிரியா, நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் செய்து கொண்டனர். தன் காதல் மனைவியை பற்றி அவர் பல நெகிழ்ச்சியான விஷியங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். பரிசுப்பொருட்களை தாண்டி என் மனைவிக்கு மறக்கமுடியாத அழகான தருணங்களை உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் என இயக்குனர் அட்லீ கூறினார்.

அவளும் அப்படித்தான், என்னுடைய சிறுவயதில் நிறைவேறாத சந்தோஷங்களை என் பிறந்தநாளில் எனக்காக நிறைவேற்றுவாள். மிக முக்கியமாக பட வேலைகளில் பிஸியாக இருக்கும் போது, குடும்பத்தை நிர்வகிப்பதே பிரியா தான், அவள் மட்டும் இல்லையென்றால் என்னால் சிறந்த படங்களை இயக்கியிருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *