பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்ல போனாலே அவர்களது மேனேஜர்களே தடுத்துவிடுகிறார்கள்.

நடிகர் விஜய் மற்றும் அஜித் அகியோர் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் வரிசையாலும் டாப்பில் உள்ளனர் எனபது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் படங்கள் வெளி வந்த சில நாட்களிலே வசூல் மழை பொழிந்து விடுகிறது. தீபாவளிக்கு வெளி வந்த பீகிள் படம் வசூல் சாதனை படைத்தது வருகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.

பல இயக்குனர்களுடன் அவர்கள் நடித்து வந்தாலும், அவர்கள் நடிகர் சூர்யா போல பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க முன்வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார் பிரபல பெண் இயக்குனர் மதுமிதா. வல்லமை தாராயோ என்கிற படத்தின் இயக்குனர் தான் இவர். நடிகர் பார்த்திபன் மற்றும் சாய சிங் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மேலும், பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்ல போனாலே அவர்களது மேனேஜர்களே தடுத்துவிடுகிறார்கள். மேலும் ‘சார் லேடி இயக்குனர்களுடன் வேலை செய்யமாட்டார்’ என கூறி அனுப்பிவிடுகிறார்கள் எனஇயக்குனர் மதுமிதா கூறியுள்ளார். தற்போது சூர்யா சுதா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் தான் என்பதில் எவ்வித மறைவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *