பிரசன்னா சினேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா?.. இணையத்தி லீக்கான புகைப்படம் இதோ!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சினோகா ஜோடி இருவரும் சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சினேகா பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிரசன்னா விஹான் பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இதையடுத்து, மகளுக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள், முதலும் முடிவும் இல்லாதவள் பாரெவர் என்பது அர்த்தம் என பிரசன்னா பேட்டி ஒன்றில் கூறினார். இந்நிலையில், தற்போது சினேகா மகளின் புகைப்படம் ஆனது முதன்முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருந்தும் முகம் தெரியாத இந்த புகைப்படம் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *