நடிகை நதியா 53 வயதிலும் இளம் நடிகைகளை மிஞ்சும் அழகு! தீயாய் பரவும் புகைப்படம்

நதியா, ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு சில தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி எனும் படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார், மேலும் ஜெயம் ரவியின் தாயாக நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.பின்னர் ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கினார். அட்டரிண்டிகி தரேதி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார்.

இன்று வரை சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிரமில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது யோக செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

Life is a balance of holding and letting go 🧘🏽‍♀️😇💫 #InternationalYogaDay

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *