நடிகை சமந்தாவை சகிலா ஆண்டி நைட்டி என கலாய்க்கும் ரசிகர்கள்!

நடிகை சமந்தா தினமும் காலையில் தனது கணவருடன் யோகா செய்து வரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் கைகளை தரையில் ஊன்றி ஒட்டுமொத்த உடலையும் மேலே எழுப்பிய படி ‘புஷ்’ செய்து யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்க விட்ட சமந்தா, தற்போது, பெரிய சைஸ் கேரி பேக் போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் மற்றும் அன்பான கணவருடன் தினமும் யோகா செய்வதை பழக்கமாக கடைபிடித்து வருகிறார்.

மேலும், 48 நாட்கள் இஷா கிரியா யோகாவை செய்யப் போவதாகவும் சமீபத்தில் சமந்தா பதிவிட்டு இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரவி வரும் நோய் தொற்று காலத்தில், அனைவரும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு, வெறும் அட்வைஸ் மட்டும் கொடுக்காமல், அவரே ரோல் மாடலாக இருந்து வித்தியாசமான யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருவது குறிபிடத்தக்கது.

ஊஞ்சல் போன்று புடவையை கட்டிக் கொண்டு, அதில் இரு கால்களையும் வைத்து, தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி நடிகை சமந்தா செய்யும் யோகா புகைப்படம் வேற லெவலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிகமான விமர்சனகளுக்கு உள்ளாகி மீம் போட்டு கலாய்க்கும் அளவுக்கு சென்று விடுகின்றது. அந்த வகையில், சமந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பறக்கும் மீம்களை இங்கே பார்க்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *