காதல் பட நகைச்சுவை நடிகர் கருட்டாண்டியின் பரிதாபமான நிலை.! இவளோதான் சார் சினிமா…

பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கருட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அருணும் ரசிகர்களை வெகுவாக கவந்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

அருண் காதல் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆனார். இதில் தளபதி விஜய் நடித்த சிவகாசியும் ஒன்று, ஆனால், அதை தொடர்ந்து அருண் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு படத்திலும் கூட இவரை காணவில்லை. அருண்க்காக எந்த பட வாய்ப்பும் வரவில்லை அதனால் தன சொந்த ஊருக்கே போய்விட்டார்.

ஆம், தூத்துக்குடி தான் இவரின் சொந்த ஊராம், அங்கு சிறுதொழில் ஒன்றை செய்து வருகின்றாராம். இப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் திரும்பியவர்கள் பல லட்சம் பேர், அதில் ஒருத்தராக அருணும் ஆகிவிட்டார். இது ரசிகர்களிடம் வருத்தத்தை அளித்துள்ளது. சினிமாவின் உண்மை நிலவரம் இவளோதான் என சினிமாவை பற்றி உண்மை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *