இயக்குனர் கௌதம் மேனனின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்..

இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார்.

கமல், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. தற்போது பிரபல ஓடிடி தளத்திற்காக அந்தோலஜி திரைப்படம் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம். அப்படத்திற்கும் இவரின் குடும்பத்திற்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த படத்தில் சூர்யா நடித்த தந்தை கதாபாத்திரம். கவுதம் மேனனின் உண்மையான தந்தையின் மூலம் இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டதாம். ஆம் இந்த புகைப்படத்தை கண்டாலே உங்களுக்கு புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *