அமலா பாலுக்கு 60 வயது ஹீரோ ஜோடியா! யார் அந்த ஹீரோ தெரியுமா?

அமலா பால் ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தென்னிந்திய திரையுலகில் பணிபுரிகிறார். மலையாள படமான நீலதமராவில் துணை வேடங்களில் தோன்றிய பிறகு, அமலா பால் தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் விதர்த்துடன் இணைந்து நடித்ததின் மூலம் செம்ம புகழ் பெற்றார். அமலா பல விருதுக் குழுக்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றார், மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதைப் பெற்றார்.

அதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிகர் விஜய் விக்ரம் அதர்வ என பலருடன் நடித்துள்ளார். மேலும், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார். அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் காதலில் இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. மேலும், இவர் நடித்த ஆடை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை, தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பாலையா தான் என்றும் கூறப்படுகிறது.  தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் பாலையா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *